"காற்றில் பறக்கும் தனிநபர் இடைவெளி" தியாகராயநகர் கடைகளில் அலை மோதும் வாடிக்கையாளர் கூட்டம்
சென்னை - தியாகராய நகர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாலை நேரங்களில், கடைசி நிமிட வியாபாரம் சூடு பிடிக்கும் போது, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் துணிகடைகள், வளையல் கடைகளில் மக்கள் பெருமளவில் குவிகிறார்கள்.
இவ்வாறு, குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவதால் தனி நபர் இடைவெளியை பின்பற்ற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
"காற்றில் பறக்கும் தனிநபர் இடைவெளி" தியாகராயநகர் கடைகளில் அலை மோதும் வாடிக்கையாளர் கூட்டம் #Chennai | #TNagar | #SocialDistance https://t.co/O4lAY6xKrl
— Polimer News (@polimernews) July 29, 2020
Comments